நெகிழ்ச்சி... நள்ளிரவில் காதலியின் வீட்டில் சிக்கிய இளைஞர்... காலையில் கோலாகலமாக நடந்த திருமணம்!

 

உத்தரப் பிரதேசத்தில் காதலியின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற இளைஞர் குடும்பத்தினரிடம் வசமாகச் சிக்கிய நிலையில், காவல் நிலையம் வரை சென்ற விவகாரம் இறுதியில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்ற இளைஞர், நள்ளிரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் அந்த இளைஞர் வசமாக மாட்டிக்கொண்டார்.

பெண்ணின் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் சேர்ந்து அந்த இளைஞரைத் தாக்கிப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இரு தரப்பு விசாரணைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் பேசிய அந்த இளம்பெண், "ஆகாஷ் இல்லாமல் தன்னால் வாழ முடியாது" என்று தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவித்தார். இதனைக் பரிசீலித்த இரு குடும்பத்தினரும் சம்மதித்து, உடனடியாக அந்த ஜோடிக்கு அருகிலுள்ள கோயிலில் வைத்துத் திருமணம் நடத்தி வைத்தனர்.