ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நெல்லையில் ஆர்ப்பாட்டம்!

 

மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும், 5 ஆண்டு ஒப்பந்தப் பணியாளர் நியமன அறிவிப்பை உடனே வாபஸ் பெற வேண்டும் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மேலும், கேங்மேன் பணியாளர்களுக்குக் கள உதவியாளர் பதவி வழங்குவது, பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்வது மற்றும் களப் பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்குவது போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. நெல்லையில் மின்வாரிய ஊழியர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.