ராமேஸ்வரத்துக்கு ஒற்றை சக்கர சைக்கிளில் வந்த இன்ஜினியர் - போதைக்கு எதிராக விழிப்புணர்வு!

 

கேரள மாநிலத்திலிருந்து போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒற்றைச் சக்கர சைக்கிளில் பயணம் மேற்கொண்டு இளைஞர் ஒருவர் ராமேசுவரம் வந்து சேர்ந்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் சனித் (25). இவர் பொறியியல் முடித்த பட்டதாரி ஆவார்.

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவர் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்.

சைக்கிளின் முன்பக்கச் சக்கரத்தை அகற்றிவிட்டு, பின்பக்கச் சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி ஒரே சக்கரத்தில் ஓட்டிச் செல்லும் சாகசப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் 25-ஆம் தேதி கேரளாவில் இருந்து விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கிய இவர், பல்வேறு ஊர்களைக் கடந்து தற்போது ராமேசுவரத்தைச் வந்தடைந்துள்ளார்.