ரயில்வே பாலத்தில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை முயற்சி!
தூத்துக்குடியில் ரயில்வே பாலத்தில் இருந்து கீழே குதித்து இன்ஜினியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் காளமாடசாமி (41), இன்ஜினியரிங் படித்துவிட்டு காற்றலை கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்தவர் இன்று மதியம் 2 மணி அளவில் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு 3வது ரயில்வே கேட் மேம்பாலத்தில் நடந்து சென்றவர் திடீரென அதில் இருந்து கீழே ரயில் தண்டவாளத்தில் குதித்தார். மேலும் கால் கை தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ரயில் ஏதும் வராதால் உயிர் தப்பினார்.
காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில்வே மேம்பாலத்தில் இருந்து இன்ஜினியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!