குழந்தைக்கான மருந்து கொடுப்பதில் தகராறு... மனைவி குடும்பத்தினர் தாக்கி என்ஜினியர் படுகொலை!
டெல்லியின் விஹார் பகுதியில் குழந்தைக்கான மருந்து தொடர்பான வாக்குவாதத்தின்போது மனைவியின் குடும்பத்தினரால் என்ஜினியர் வினய் குப்தா தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வினய்க்கு மனைவியும் 4 மாத இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து மனைவியும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து வினய்யைக் கழுத்தை நெரித்தும் மார்பில் தாக்கியும் கொன்றதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு முன் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாகவும் வினய்யின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். திட்டமிட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
குடும்பத் தகராறு முற்றியதால் நிகழ்ந்த இந்தத் கொடூரச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.