"போதும் போதும் நிறுத்துங்க": வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச் சொன்ன சோனியா காந்தி!

 

காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் முழுப் பாடலையும் பாடக் குழுவினர் பாடியதால், அதனைப் பாதியில் நிறுத்துமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சைகை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் கட்சித் தலைமையக நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே பாடப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில், பாடல் குழுவினர் முதல் 2 வரிகளுடன் நிறுத்தாமல் வந்தே மாதரத்தின் அனைத்து வரிகளையும் முழுமையாகத் தொடர்ந்து பாடத் தொடங்கினர்.

பாடலின் நீளம் தொடர்ந்து அதிகரிப்பைக் கண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். பாடலை இத்துடன் நிறுத்துமாறு கைகளால் சைகை செய்து சுட்டிக்காட்டினர். கட்சித் தலைவர்கள் கையால் சைகை செய்து தடுத்தபோதிலும், பாடக் குழுவினர் பாடலை இடையிலேயே நிறுத்தாமல் முழுமையாகப் பாடி முடித்தனர். இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.