அரசு மருத்துவமனையில் மூதாட்டியை எலி கடித்த அவலம் - இபிஎஸ் கண்டனம்!

 

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்திற்குத் தனதுகண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பற்ற நிலையைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்,  அரசை முழுமையாக நம்பி சிகிச்சைப் பெற வந்த இடத்தில் எலி கடித்து, அப்பெண் தனது கால் விரலையே இழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உடனடியாகத் தேவையான அனைத்து உயர்தர மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குவதோடு, உரிய நிவாரண இழப்பீட்டையும் அரசு வழங்கிட வேண்டும். அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் அலட்சியப் போக்கைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ள அவர், "அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதுகாப்பின்றித் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய துறை அமைச்சரோ 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் காட்சியைக் கண்டு திரையரங்கில் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.