ஆசிய விளையாட்டில் ஈஷா சிங் அசத்தல்! 25 மீட்டர் பிஸ்டலில் இந்தியாவுக்கு வெள்ளி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஈஷா சிங் 38 புள்ளிகளுடன் சீனாவின் சியாவோ ஜியாருசுவானுடன் சமநிலையில் இருந்தார். இதையடுத்து தங்கப் பதக்கத்தை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடைபெற்றது.
தங்கத்துக்கான ஷூட்-ஆஃப் போட்டியில் சீன வீராங்கனை சியாவோ ஜியாருசுவான் வெற்றி பெற்றார். இதனால் ஈஷா சிங்கிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வடகொரியாவின் கிம் ஹியோன் சுக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இறுதிப்போட்டிக்கு ஈஷா சிங் 580-22x என்ற புள்ளிகளுடன் 8-வது இடத்தில் தகுதி பெற்றிருந்தார். போட்டியின் ஒரு கட்டத்தில் பதக்க வாய்ப்பிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த அவர், அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் முன்னேறினார்.
பின்னர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வடகொரியாவின் கிம் ஹியோன் சுக்குடன் பல்வேறு ஷூட்-ஆஃப் சுற்றுகளில் ஈஷா சிங் போராடினார். இறுதியில் அவரை முந்தி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அதன் பின்னர் தங்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனையிடம் போராடி வெள்ளியுடன் நிறைவு செய்தார்.இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் மீண்டும் பதக்கம் வென்றுள்ளார். இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணிக்கும் இந்தப் பதக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.