“தாலி கட்டிய ஈரம் கூட காயலை... ” ரிசப்ஷன் மேடையிலேயே மயங்கி விழுந்து மணமகன் உயிரிழந்த துயரம்!

 

பீகார் மாநிலம் பாட்னாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவைச் சேர்ந்த ஆயுஷ் மருத்துவர் பவனுக்கு, தீஷா என்ற பெண்ணுடன் கடந்த 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்று, ஏராளமானோர் கலந்து கொண்ட விருந்து நிகழ்வும் சிறப்பாக நடந்துள்ளது.

திருமணத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் மாலை மணமகனின் சொந்த ஊரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் மேடையில் நின்றிருந்த பவனுக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்.

உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கணவரின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த புதுமணப்பெண் தீஷா மயக்கமடைந்ததை அடுத்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது