தினமும் 6000லிட்டர் சிறுநீர்... எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்கான காரணம் இது தான்... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!
Sep 5, 2026, 19:45 IST
எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதி முகாமில் தங்கும் மலையேறிகளின் சிறுநீர் கழிப்பு மற்றும் எரிபொருள் பயன்பாடு அங்குள்ள பனிப்பாறைகளை அதிவேகமாக உருகச் செய்து வருவதாகப் புதிய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
சர்வதேச அளவில் உலகளாவிய பருவநிலை மாற்றமே முக்கியக் காரணமாக இருந்தாலும், உள்ளூர் அளவில் எவரெஸ்ட் தள முகாமில் எரிக்கப்படும் எரிபொருட்களும் நேரடியாகக் கழிக்கப்படும் சிறுநீரும் பனி உருகுவதை மேலும் துரிதப்படுத்துகின்றன.
உடலின் வெப்பத்துடன் நேரடியாக வெளியேறும் சிறுநீர் மற்றும் சமையல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருட்களிலிருந்து வெளியாகும் வெப்பம் காரணமாக ஒவ்வொரு மலையேற்றக் காலத்திலும் ஆயிரக்கணக்கான டன் பனி உருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.