“எல்லாம் 3 வேளை சோத்துக்காகத் தான்” - விஜய் குறித்து யோகி பாபு சொன்ன தகவல்!
திரைத்துரை மற்றும் அரசியல் எனப் பல தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் குறித்து, நகைச்சுவை நடிகர் யோகி பாபு பகிர்ந்த ஒரு சுவாரசியமான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை யோகி பாபு சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சர்கார் படத்தில் ஒரு பாடலுக்காக விஜய் மிகக் கடினமான நடன அசைவுகளை ஒரே ஷாட்டில் ஆடி முடித்துள்ளார். ஆடிய முடித்தவுடன் அங்கிருந்த யோகி பாபுவின் தோளைத் தொட்ட விஜய், "யோகி, என் கால் முட்டியைத் தொட்டுப் பாருடா" என்று கூறியுள்ளார்.
யோகி பாபு தொட்டுப் பார்த்தபோது, விஜய்யின் கால் முட்டிகள் அந்த வேகமான நடனத்தால் 'கடகடவென' நடுங்கிக் கொண்டிருந்தனவாம். அப்போது விஜய் மிகவும் இயல்பாக, "பாத்தியா யோகி... இந்த 3 வேளை சோத்துக்காக எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கு" என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம்.
இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், தனது வேலையில் விஜய் காட்டும் அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. இந்தத் தகவல் தற்போது வைரலாகக் காரணம், விஜய் சமீபத்தில் தனது கட்சி பணிகளுக்காகவும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும் தீவிரமாக இயங்கி வருவதுதான்.
யோகி பாபு ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதனை முதன்முதலில் குறிப்பிட்டார். அதன் பிறகு பல மேடைகளிலும் விஜய்யின் கடின உழைப்பிற்கு உதாரணமாக இந்தச் சம்பவத்தைச் சொல்லி வருகிறார்.