ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து மணப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.நாளை சத்தியமூர்த்தி பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேரு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர்.ஏற்கனவே முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ராவை இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார். என்னை எப்போது சந்திக்க வந்தாலும், "உடம்ப பாத்துக்கோங்க" என்று அக்கறையுடன் சொல்லத் தவறியதே இல்லை' என பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!