காதலியின் அந்தரங்கப் படங்களை வருங்கால கணவருக்கு அனுப்பி முன்னாள் காதலன் - பட்டதாரி பெண் தற்கொலை!

 

ராமநாதபுரம் அருகே திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பட்டதாரிப் பெண், தனது முன்னாள் காதலன் அந்தரங்கப் புகைப்படங்களை வருங்காலக் கணவருக்கு அனுப்பி மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள மூப்பன்வலசையைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் சரிதா என்பவருக்கும், வேறு ஒரு நபருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது முன்னாள் காதலன் லோகேஷ், சரிதாவுடன் முன்பு நெருக்கமாக இருந்த அந்தரங்கப் புகைப்படங்களை அவரது வருங்காலக் கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், அந்தத் திருமணத்தை நிறுத்தும்படி மிரட்டல் விடுத்துள்ளார்.

காதலனின் இந்தச் செயலால் கடும் மனவேதனை அடைந்த சரிதா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவாக உள்ள லோகேஷைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்யும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.