பெங்களூரில் பரபரப்பு.. பதற்றம்.. ஒரே பள்ளியில் 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு - 2 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 21 ஆசிரியர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியாகக் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு அறிகுறிகள் காணப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதித்ததில், இதில் இரண்டு பேருக்கு எச்1என்1 வைரஸ் பாதிப்பு இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்திற்கு வெளியே இயங்கி வரும் தெருவோர உணவுக் கடைகளில் உள்ள சுகாதாரமற்ற சூழலே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இ நோய் பரவ முக்கியக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தெருவோரக் கடைகளில் உடனடி ஆய்வு மேற்கொண்டு, உரியச் சுகாதார நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளி நிர்வாகம் சார்பாகக் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.