undefined

அதிமுகவில் இருந்து நீக்கம்... இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன்!

 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

செங்கோட்டையன் அண்மையில், அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் அவர் வகித்த கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டன. இருப்பினும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில், கடந்த பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் செங்கோட்டையன் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பங்கேற்றார். அங்கு டி.டி.வி. தினகரனுடன் சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், சசிகலாவை இருவரும் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துரையாடினர். அதன் பின் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக நீக்க அறிவிப்புக்கு பின் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளனர். இதுகுறித்து நாளை (இன்று) விரிவாக விளக்கமளிக்கிறேன். கோபி கட்சி அலுவலகத்தில் இதற்கான விளக்கத்தை தெரிவிக்க உள்ளேன்,” என கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?