அதிர்ச்சி வீடியோ!! எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 25 பேர் பலி!! 80 பேர் கவலைக்கிடம்!!
பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராவல்பிண்டிக்கு சென்றுக்கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸின் 10 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன . பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தடம்புரண்ட 10 பெட்டிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.படுகாயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்து காரணமாக, அப்பாதையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2021ல் சிந்து மாகாணத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் ரயில்வே துறையை மேம்படுத்த அரசாங்கங்கள் முயன்று வருகின்றன. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக அது நிறைவேறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?