"பயங்கரவாத நாடு என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது" - பாகிஸ்தானுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி!
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தியாவின் மீது பாகிஸ்தான் செய்தியாளர் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது வழக்கமான பாணியில் கடும் கண்டனத்துடன் பதிலளித்துள்ளார்.
ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் "இந்தியா பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை எப்போது நிறுத்தும்?" என்ற கேள்வியை எழுப்பினார்.
அந்தக் கேள்விக்குச் சற்றும் தாமதிக்காமல் பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "ஒரு பயங்கரவாத நாடு என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறதா?" என்று கூறி அதற்கு உரிய சாட்டையடிப் பதிலைக் கொடுத்தார்.
ஜெய்சங்கரின் இந்த பதிலைத் தொடர்ந்து, இந்தியாவின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி உடனேயே குறுக்கிட்டு, "உங்களுக்கான பதிலை மிகத் தெளிவாகக் கேட்டு விட்டீர்கள்" என அந்தச் செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்நிகழ்வு தற்போது சர்வதேச அளவில் பெரும் பேசும் பொருளாகியுள்ளது.