உஷார்...  ஆன்மிகத்தின் பெயரால் போலி சாமியார்கள் காவி உடையில் அருவறுப்பு...  அதிர்ச்சி வீடியோ!

 

ஆன்மீகத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திப் பெண்களை ஏமாற்றித் தீய செயல்களில் ஈடுபடும் போலி சாமியார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோவைத் தொடர்ந்து, இது போன்ற சமூக விரோதச் செயல்களுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பக்தி மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாகக் கருதப்படும் காவி உடையை அணிந்துகொண்டு சிலர் இதுபோன்று சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ये ढोंगी साधु साधु एक लड़की को बेहोश करके उसके साथ दुष्कर्म करने की कोशिश कर रहा था ....

तभी अचानक वह एक व्यक्ति पहुंच जाता है वो कैमरे में सब कुछ रिकॉर्ड करने लगा...

वो पूछता है ये क्या कर रहे हो तो ढोंगी बोलता है कि हिंदू राष्ट्र बना रहा हु...

नाडा खोलकर हिंदू राष्ट्र कौन… pic.twitter.com/zcMfUBXTeo

— Vidit Yadav (@YadavVidit8599) August 4, 2026

ஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துத் தவறு செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவமும், அதற்கு மதத்தின் பெயரில் நியாயம் கற்பிக்க முயன்றதாக வெளியாகியுள்ள தகவல்களும் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறையினர் உடனடியாக அடையாளம் கண்டு, சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆன்மீகத்தை மூடுதிரையாகப் பயன்படுத்தித் குற்றம் செய்யத் துணிபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் மட்டுமே சரியான தடுப்பு நடவடிக்கையாக அமையும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

ஆன்மீக சேவையில் நேர்மையாக ஈடுபட்டுவரும் பலரினது நற்பெயருக்கும் இதுபோன்ற போலி நபர்களின் செயல்கள் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, உண்மையான ஆன்மீகவாதிகளையும் குற்றச் செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற போலி நபர்களையும் மக்கள் விழிப்புணர்வுடன் முழுமையாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.