கள்ளக்காதலால் விபரீதம்... திருமணமாகி 2  குழந்தைகள் உள்ள பெண் கழுத்தை நெரித்துக் கொலை!  

 

 

ஈரோடு மாவட்டம் பி.பி. அஹ்ரகாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தினேஷின் மனைவி சுகுணா. இவருக்கும் அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் தவுபீக் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே இருமுறை காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

சம்பவத்தன்று தவுபீக்கின் வீட்டுக்குச் சென்ற சுகுணாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தவுபீக் அவரது கழுத்தை நெரித்ததில் சுகுணா மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்தவரைச் சாலையோரம் இழுத்துச் சென்று விட்டுவிட்டுத் தவுபீக் தப்பியோடியது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுகுணா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இக்கொலை சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.