undefined

பகீர்... அடுத்தடுத்து நடுரோட்டில் சரிந்து விழுந்த மின்கம்பங்கள்... இளம்பெண் படுகாயம்.... அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்!

 
தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கர் நகரில் மின் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் இளம்பெண் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவரை அமைச்சர்  பெ. கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் சுந்தரவேல்புரம் மேற்குப் பகுதியில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதன் காரணமாக அடுத்தடுத்த 3 மின்கம்பங்களும் சாலையில் சரிந்து விழுந்தன. அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (27), மாலா(24) ஆகியோர் மின்வயர்கள் பட்டதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களில் மாலா காயமின்றி தப்பினார். தேன்மொழி படுகாயமடைந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேன்மொழியை சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!