undefined

பகீர்.. ஆசிரியை வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை.. 10 சவரன் தங்க நகைகள் அபேஸ்!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், எம் எம் நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சலா .இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும்  பள்ளியில் ஆசிரியையாக  பணிபுரிந்து வரும் நிலையில் வழக்கம்போல் நேற்று வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார் . இந்த நிலையில் பள்ளியில் இருந்த போது அவ்வழியாக சென்ற ஒருவர் வீடு திறந்து இருப்பதாக சஞ்சலாவிற்கு தகவல் அளித்துள்ளனர் .

அதன் பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து  உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவுக்கு அருகில்  வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் மதிப்பிலான  வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதுகுறித்து ஆசிரியை சஞ்சலா ஆம்பூர் கிராமிய காவல்  நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா