பகீர் வீடியோ... மாட்டுவண்டியில் இருந்து விழப் போன முதல்வர் விஜய் - பாதுகாவலரின் சுதாரிப்பால் தப்பிய அசம்பாவிதம்!
தாராபுரம் இடைத்தேர்தல் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தின்போது மாட்டுவண்டியில் ஏறி ஆதரவு திரட்டிய முதலமைச்சர் விஜய், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி விழப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய், அங்குத் தொண்டர்களால் கொண்டுவரப்பட்ட மாட்டுவண்டியில் ஏறிச் சிறிது தூரம் ஓட்டிச் சென்று வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வழியில் தொண்டர்கள் வழங்கி வாழ்த்திய பரிசுப் பொருட்கள் மற்றும் புகைப்படப் சட்டங்களை (Picture frames) அவர் பெற்றுக்கொண்டார். அப்போது ஒரு புகைப்படப் சட்டத்தைப் பெற்றுக்கொண்டு அதை வண்டியின் பின்புறம் கொடுக்க முயன்றபோது, மாடுகள் திடீரென நகர்ந்து முன்னோக்கிச் சென்றன.
இதனால் வண்டியில் நின்றிருந்த முதல்வர் விஜய் திடீரென நிலைதடுமாறி கீழே விழப் பார்த்தார். எனினும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த பாதுகாவலர் உடனடியாகச் சுதாரித்து அவரைத் தாங்கிப் பிடித்ததால் எந்தவித காயமும் இன்றி அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.