undefined

பகீர்.. தனது விரல்களை தானே துண்டித்து நாடகமாடிய இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீசார்!

 

மயூர் தர்பரா என்பவர் குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப நிறுவனத்தின் கணக்கு பிரிவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி மயூர் தனது நண்பரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அம்ரோலியில் உள்ள ரிங் ரோட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாக போலீசில் புகார் செய்தார்.

10 நிமிடம் கழித்து கண்விழித்து பார்த்தபோது, ​​இடது கையின் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டதைக் கண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​மயூரே தனது கைவிரல்களை துண்டித்தது தெரியவந்தது. ஒரு கடையில் கூர்மையான கத்தியை வாங்கினார். பின்னர் ரிங் ரோடுக்கு சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரவு 10 மணியளவில் தனது நான்கு விரல்களையும் கத்தியால் அறுத்துள்ளார். அப்போது ரத்த ஓட்டத்தை நிறுத்த முழங்கையின் அருகே கயிற்றை கட்டினார்.

இதையடுத்து, கத்தி மற்றும் கைவிரல்களை பையில் வைத்து தூக்கி வீசினார். இதையடுத்து, நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் தனது உறவினர் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பவில்லை. இதுபற்றி உறவினர்களிடம் கூற அவருக்கு தைரியம் இல்லை. இதனால், மயூரின் விரல்கள் வெட்டப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!