undefined

 பிரபல நடிகையின் குளியலறை வீடியோ... இணையத்தில் லீக்கானதால் அதிர்ச்சி!

 
 

2013-ல் வெளியான ‘சிங் சாப் தி கிரேட்’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானாவர் ஊர்வசி ராவ்டேலா. அதனைத் தொடர்ந்து பல இந்தி படலகளில் நடித்துள்ள இவர், 2022-ல் சரணவா அருள் நடிப்பில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணாவின் 109 -வது படமான இதை பாபி இயக்குகிறார். பாபி தியோல் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
 

தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவரின் குளியலறை வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்து பெரும் புயலை கிளப்பியது. அந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த வீடியோ ஊர்வசிக்கு தெரியாமல் வெளியாக வாய்பே இல்லை என்றும், இது படத்திற்கான ப்ரோமோஷன் வீடியோ என்றும் கருத்துக்கள் பரவின. இருப்பினும் ஊர்வசியின் தீவிர ரசிகர்கள், அந்த வீடியோவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

ஒரு வாரத்திற்கும் மேலாக புகைந்து கொண்டு இருக்கும் இந்த வீடியோ குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருந்த ஊர்வசி, அந்த வீடியோவைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அந்த வீடியோ நான் நடித்து வரவிருக்கும் திரைப்படமான குஸ்பைதியா படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி. இது எனது நிஜ வாழ்க்கையோ அல்லது அதிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவோ இல்லை.

 

‘குஸ்பைத்தியா’ திரைப்படம், ஆகஸ்ட் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் டிஜிட்டல் ஆபத்துகளை வெளிச்சம் போட்டு காட்டும் திரைப்படமாகும். இப்படத்தில் வினீத் குமார் சிங் மற்றும் அக்‌ஷய் ஓபராய் இணைந்து நடித்துள்ளனர் என்றார்