undefined

 ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல கொரிய நடிகர் பார்க் மின் ஜே 32 வயதில் மாரடைப்பால் மரணம்!

 
 


பிரபல கொரிய மொழி திரைப்பட நடிகர் நடிகர் பார்க் மின் ஜே தனது 32வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானதாக வெளியான செய்தி கொரிய மொழி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

நடிகர் பார்க் மின் ஜே, சீனாவில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவருக்கு அடிப்படை மருத்துவ நிலைகள், பிரச்சனைகள் எதுவும் இருந்து வந்ததாக தெரியவில்லை.

நடிகர் பார்க் மின் ஜே வின் இறுதி சடங்குகள் நாளை டிசம்பர் 4ம் தேதி எவ்ஹா சியோலில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 

நடிகர் பார்க் மின் ஜேயின் சகோதரர் இன்ஸ்டாகிராமில் இந்த துயர செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், "எங்கள் அன்புக்குரிய சகோதரர் நிம்மதியாக ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். முடிந்தவரை பலர் அவரைப் பார்க்க வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

பார்க் மின் ஜேயின் ஏஜென்சி, பிக் டைட்டில், நடிகரின் திறமையை மதிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதி. அதில், "நடிப்பை நேசித்து எப்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் திறமையான நடிகரான பார்க் மின் ஜே காலமானார். இனி அவரது நடிப்பை பார்க்க முடியாவிட்டாலும், பிக் டைட்டில் மதிப்புமிக்க நடிகராக அவரை பெருமையுடன் நினைவு கூர்வோம். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளது.

நடிகர் பார்க் மின் ஜே  The Coupல் அவரது கதாபாத்திரத்திற்காக 2021ல் ரசிகர்களிடையே பரவலான அங்கீகாரம் பெற்றார். லிட்டில் வுமன், நம்பர்ஸ் மற்றும் கொரியா - கிதான் வார் போன்ற படங்களின் மூலமாக பாராட்டப்பட்ட அவர் தனது நடிப்பு வாழ்க்கையை மேலும் விரிவுபடுத்த துவங்கியிருந்தார். இந்நிலையில், 32 வயதிலேயே அவர் மாரடைப்பால் மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!