undefined

அதிகாலையில் பயங்கரம்...  ஸ்ரீரங்கம் அருகே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை!

 

 
தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியில் வசித்து வருபவர் பிரபல ரவுடி அன்பு. இவரை 6 பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சியில் ரெளடி திலீப் தரப்பைச் சேர்ந்த அன்பு என்ற நபர், மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

பல வழக்குகளில் தொடர்புடைய அன்பு, இன்று காலை உடற்பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்ம கும்பலால் துரத்தப்பட்டு, சுமார் 500 மீட்டர் தூரம் தப்பி ஓடினார்.  ஆனால் மர்ம நபர்களால் தெப்பக்குளம் பகுதியில் மடக்கி பிடிக்கப்பட்டு அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பலியான அன்புவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இக்கொலை சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பழிக்கு பழி கொலை நடக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர  விசாரணை செய்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!