ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல பாடகர் அங்கித் பால்யன் சுட்டுக்கொலை - ஹரியானாவில் பதற்றம்!
Aug 27, 2026, 11:48 IST
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகரும் யூடியூபருமான அங்கித் பால்யன் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்மில் தனது உடற்பயிற்சிப் பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அங்கித் பால்யனை, பதுங்கியிருந்த மர்ம நபர்கள் குறிவைத்து சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் இதற்கு முன்பு பாடிய பாடலின் வரிகளை அச்சு அசலாக இந்தச் சம்பவம் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கும் இசை உலகத்தினருக்கும் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.