மழையிலும் குவிந்த ரசிகர்கள்… போயஸ் கார்டனில் ஃப்ளையிங் கிஸ் கொடுத்து ரஜினி தீபாவளி வாழ்த்து!
Updated: Nov 8, 2026, 10:39 IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார். மழையையும் பொருட்படுத்தாமல் அவரைக் காணக் காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினி அளித்த உற்சாக வரவேற்பு, அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ரஜினிகாந்தைக் கண்டதும் ரசிகர்கள், “தலைவா… தலைவா… என் தெய்வமே… என் ராஜாவே…” என உற்சாகமாகக் குரல் எழுப்பினர். அவர்களின் அன்புக்கு மகிழ்ச்சியுடன் பதிலளித்த ரஜினிகாந்த், ரசிகர்களை நோக்கிப் பறக்கும் முத்தங்களை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளி தருணமாக அமைந்தது.