“ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் இழப்பார்கள்” - தோனிக்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

 

 ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விடைபெறும் எம்.எஸ். தோனிக்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

"ஐபிஎல் சகாப்தத்தில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு எண்ணற்ற மறக்க முடியாத நினைவுகளை வழங்கிய தோனி இப்போது களத்திலிருந்து விலகுகிறார். நீங்கள் கொடுத்த அழகான நினைவுகளுக்கும் அற்புதமான தருணங்களுக்கும் நன்றி" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னைக்கு தோனி மீது எப்போதும் ஒரு தனி அன்பு இருக்கும் என்றும், சிஎஸ்கே ரசிகர்கள் அவரது புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்கள், அபாரமான ஸ்டம்பிங்குகள் மற்றும் கடினமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக மாற்றிய அவரது நிதானத்தை நிச்சயமாக மிஸ் செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாகப் புதிய பொறுப்பை ஏற்கவுள்ள எம்.எஸ். தோனிக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் உரித்தாக்கியுள்ளார்.