கனமழையால் கதறும் விவசாயிகள்... தஞ்சை, நாகையில் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்!
வடகிழக்கு பருவ மழை துவங்கியதுமே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 1,500 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், கடந்த 3 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இடையீடு இல்லாமல் மழை பெய்து வருகிறது. காட்டூர், வாண்டையார், தலையாமங்கலம், நெய்வாசல், சாலியமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் நாகை மாவட்டம் கீழ்வேளூர், ஆழியூர், கூத்தூர், ராதாமங்கலம், திருக்கண்ணங்குடி, வடக்காலத்தூர், இருக்கை, தேவூர், செருநல்லூர், செம்பியன்மகாதேவி, கலசம்பாடி பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நெல்லை சேமிப்புக் கிடங்குகளுக்கு உடனே அனுப்பி கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!