மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு -  விவசாயிகள் கவலை!

 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருவது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,121 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 72.00 அடியாகக் குறைந்துள்ளது.

அணையின் மொத்த நீர்தேக்க கொள்ளளவு 93.47 டி.எம்.சி ஆகும். டெல்டா பாசனத் தேவைகளுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வந்துசேரும் நீரின் அளவை விட (2,121 கனஅடி), பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு பல மடங்கு குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் இன்னும் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா சாகுபடிப் பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.