தவெகவில் இணைந்தார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா!

 

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா தமிழக வெற்றிக் கழகத்தில் முறைப்படி இணைந்துள்ளார். இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற அவர், தவெகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

ஜாய் கிரிசில்டா தமிழகத்தின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். மேலும், இவர் திரைத்துறையில் நடிகராகவும், பிரபல சமையல் கலை நிபுணராகவும் வலம் வரும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாய் கிரிசில்டா, தனது புதிய அரசியல் பயணம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

"தமிழக வெற்றிக் கழகத்தில் தற்pபோது இணைந்துள்ளது எனக்குப் பெரும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் நின்று செயல்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே நான் தவெகவில் இணைந்துள்ளேன்."

திரைத்துறை மற்றும் வணிகத் துறையைச் சார்ந்த முக்கியப் புள்ளிகளும் தற்போது தவெகவை நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்பி வருவது, அக்கட்சியின் அடிமட்ட பலத்தை மேலும் கூட்டும் என அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.