தந்தை மரணம்.. பிக் பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய ஆனந்தி!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டுள்ள நடிகை ஆனந்தி தனது தந்தையின் திடீர் மறைவு காரணமாக அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறியுள்ள சம்பவம் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10ன் இந்த வாரத்துக்கான எவிக்சன் நாமினேஷன் பட்டியலில் அன்சர், ஆனந்தி, சாந்தினி, தன்யா, முனியம்மாள், ஷமா மற்றும் ராகவ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் நடிகை ஆனந்தியின் தந்தை மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் துயரச் செய்தியைக் கேட்டவுடன் அவர் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளார். எதிர்பாராத இந்தத் துயரச் சம்பவத்தால் பிக் பாஸ் வீட்டின் சக போட்டியாளர்களும் நிகழ்ச்சியின் படக்குழுவினரும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.