பெண் ஊழியர்கள் புறக்கணிப்பால் வேலைநிறுத்தம்... பிரான்ஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்!
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கோபுரத்தின் ஊழியர்கள் நடத்திய திடீர் வேலைநிறுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தைப் பார்வையிட இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளனர். அப்போது அந்தக்குழுவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, நிர்வாகம் பெண் ஊழியர்களை அவர்களின் பணியிடங்களில் இருந்து சிறிது நேரம் விலக்கி வைத்தது. மேலும், குறிப்பிட்ட அந்தச் சில மணி நேரங்களுக்கு ஆண் ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாலின அடிப்படையில் பெண்களைப் பணியிடத்திலிருந்து ஒதுக்கி வைத்தது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்று கண்டித்து ஊழியர்கள் உடனடியாகப் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இச்சம்பவத்திற்குப் பிரான்ஸ் நாட்டின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்து அமைப்புக் குழுவினர் பெண்களுடனான தொடர்பைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்தது உண்மைதான் என்றும், ஆனால் அந்த நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுத் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஈபிள் கோபுரம், விரைவில் சுமூகமான தீர் எட்டப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.