உஷார்... பெண் நீதிபதியை உதைத்து தள்ளி செயின் பறிப்பு... தங்கம் விலை உயர்வால் அதிகரிக்கும் குற்றங்கள்!
நாளுக்கு நாள் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜெய்ப்பூர், பிகானீர் மாவட்டத்தைச் சேர்ந்த பயிற்சி நீதிபதி பூர்ணிமா ஜனகல் (25), சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, இரண்டு மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர். திடீரென அவர்கள் வாகனத்தை காலால் உதைத்து பூர்ணிமாவை தள்ளி விட்டனர். இதில் பூர்ணிமா நிலைகுலைத்து கீழே விழுந்து, பலத்த காயம் அடைந்தார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பூர்ணிமாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!