undefined

திருடனுடன் காதல் ... பெண் காவலர் திருமணத்துக்கு முன் போலீஸ் மாப்பிள்ளையை விட்டு  ‘ஹிஸ்டரி-ஷீட்டர்’ உடன் ஓட்டம்  !

 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. 25 வயதான பெண் காவலர் சந்தியா பாரத்வாஜ், தனது திருமணம் நடைபெற சில மணி நேரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு சக காவலர் அதுல் சர்மாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. திருமண நிகழ்வு நடைபெறவிருந்த நிலையில், அவர் திடீரென காணாமல் போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், பல குற்ற வழக்குகளில் பெயர் உள்ள அங்கித் சவுகான் என்ற history-sheeter உடன் அவர் சென்றிருப்பது தெரியவந்தது. அங்கித் முன்பு கைது செய்யப்பட்டபோது, அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் சந்தியா ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மகள் கடத்தப்பட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால் போலீசார் கண்டுபிடித்தபோது, தானாகவே சென்றதாக சந்தியா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.