மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகை.. விமான நிலையத்தில் வரவேற்பு!
Aug 1, 2026, 07:15 IST
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்து சேர்ந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய நிதி அமைச்சருக்குப் பாஜக நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை திருவான்மியூரில் நடைபெறும் 'திருச்செந்தூர் தலபுராணம்' என்ற வரலாற்று புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெறும் பல்வேறு பொது நிகழ்வுகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளார்.