ட்விட்டருக்கு 2.89 கோடி அபராதம்!! எலான் மஸ்க் அதிர்ச்சி!!

 

2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, முன்னாள் அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.


இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்க கோரி அந்நிறுவனத்துக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்னும் முழுமையான தகவல்களை அந்நிறுவனம் வழங்கவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தகவல்களை முழுமையாக தருவதில் தாமதம் ஏற்படுத்தியது,

நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.அதன்படி, ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.3.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடியாகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!