லாரி, மினி பேருந்து மோதி பயங்கர தீவிபத்து... உடல் கருகி 27 பாதிரியார்கள் பலி!
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரான ஹராரேவிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவ்ஹு பகுதியில் லாரியும், தேவாலய வழிபாட்டிற்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
🚨 27 KILLED in horrific Zimbabwe crash, on Friday night - SA truck collides with minibus taxi.
— SA NATIONAL TRAFFIC UPDATES (@lnnocent191535) August 29, 2026
Tragic loss of lives. Condolences to all families.#ZimbabweCrash
#RoadSafety pic.twitter.com/kbF3egCnWj
மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து மீது மோதியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தின் தீவிரத்தால் மினி பேருந்து முற்றிலுமாகத் தீப்பிடித்து எரிந்து சாம்பலானதுடன், இதில் படுகாயமடைந்த பலரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் தொடரும் சாலை விபத்துகளும், பாதுகாப்பற்ற போக்குவரத்து முறைகளும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.