சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!
Aug 30, 2026, 19:00 IST
சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளது. குப்பைக் கிடங்கில் திடீரெனப் பற்றிய தீ மளமளவெனப் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வானுயர எழுந்த அடர்ந்த புகையினால் அப்பகுதி மக்களுக்குக் கண் எரிச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுப் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.