பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் சிதறி ஒருவர் பலி!
Sep 5, 2026, 11:00 IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் வெடி விபத்தில் ஆலையின் ஒரு அறை முழுமையாக இடிந்து சேதமடைந்துள்ளதுடன், அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனமும் தீயில் எரிந்து நாசமானது. இடிபாடுகளுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.