சிவகாசியில் பட்டாசு விலை 25% உயர்வு - உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விலை 25 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி சரிவு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பட்டாசு தயாரிப்புக்கு அவசியமான ரசாயனங்கள் மற்றும் இதர மூலப்பொருட்களின் விலையில் கடுமையான ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டு பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி சுமார் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாகச் சந்தையில் தேவைக்க்கேற்ப விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளியைக் கொண்டாடும் நடுத்தர மற்றும் எளிய மக்கள், பட்டாசுகளின் விலை உயர்வின் காரணமாகத் தங்களது பட்டாசு வாங்கும் திட்டத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.