undefined

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு.. அனுமதி அளித்த காவல்துறை!

 

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்ததையும், சில நாட்களுக்கு முன்பு தனது கட்சிக் கொடியை அவர் வெளியிட்டதையும் அனைவரும் அறிவோம். இந்நிலையில், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.

இதற்காக அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. விண்ணப்பத்தை ஆய்வு செய்த போலீசார் 21 கேள்விகள் கேட்டதாகவும், அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தகுந்த விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விளக்கத்தை காவல்துறை ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி  தமிழக  வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.  இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!