undefined

இன்று சாம்பல் புதன் வழிபாடு - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

 

இன்று சாம்பல் புதன் வழிபாட்டையொட்டி, நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் என தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன. 

தவக்காலத்தின் (தொடக்கமாக அனுசரிக்கப்படும் இந்நாளில் மீனவர்கள் பாரம்பரியமாக கடலுக்கு செல்வதைத் தவிர்த்து, வழிபாடுகளில் பங்கேற்றனர். இதன் காரணமாக விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.