நாளை காலை 10 மணி வரை மீன்பிடிக்க தடை... அதிரடி உத்தரவு!

 

நாளை ஆகஸ்ட் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை இந்தியாவின் 77வது சுதந்திர தினம்  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில்  சென்னை கடற்கரை சாலையில்  நடைபெறும் சுதந்திரதின விழா கொண்டாட்டதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்  பலப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை கடற்கரை பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.  

அதில்   “பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை  4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  சுதந்திர தின விழா நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த பிறகு வழக்கம் போல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லலாம் எனத்   தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!