நடுவானில் பறந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற பயணி...  பரபரப்பு வீடியோ!

 

கோலாலம்பூரில் இருந்து கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் திடீரென அவசர கால கதவைத் திறக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த ஜம்ஷீர் என்ற பயணி பயணம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக விமானத்தின் அவசர கால கதவை வலுக்கட்டக்கமாகத் திறக்க முயன்றுள்ளார்.

allowfullscreen

அதுமட்டுமின்றி அந்த அவசர கால கதவின் கண்ணாடிப் பகுதியையும் அவர் சேதப்படுத்தியதுடன் அருகில் இருந்த சக பயணிகளையும் கடுமையாக மிரட்டியுள்ளார்.விமானப் பணியாளர்கள் மற்றும் சக பயணிகள் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பயணியைக் கடுமையாகத் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானம் கொச்சி விமான நிலையத்திற்குத் தரை இறங்கியவுடன், பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பயணியைக் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விமானப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்ற இந்தச் சம்பவம் விமானப் பயணிகளிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட நபர் மீது காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.