நடுவானில் உடல்நலக்குறைபாடு...   இலங்கையில் அவசர , அவசரமாகத் தரையிறக்கப்பட்ட  விமானம்!

 

 

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 178 பயணிகளுடன் திருச்சி நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், நடுவானில் பயணி ஒருவர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த விமானம் இலங்கையில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பயிணிக்கான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்ட விமானம் திருச்சி விமான நிலையத்தை பாதுகாப்பாக வந்தடைந்தது.