undefined

 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் பெரும் பரபரப்பு!

 

 சமீபகாலமாக விமானப் பயணங்களீல் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டு பயணிகளிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் செஸ்னா 182 மற்றும் ஜாபிரு என்ற சிறிய ரக விமானங்கள் சிட்னியின் தென்மேற்கு பகுதியில் பறந்துகொண்டிருந்தன. அப்போது இரு விமானங்களும்  நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 
 
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. விபத்திற்குள்ளான விமானங்களில் ஒன்று இரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு செஸ்நாக்கில் இருந்து வொல்லொங்காங் நகருக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து போலீசார் விடுத்த செய்திக்குறிப்பில்  “நாங்கள் இங்கு மிக அருகில் இருக்கும் காட்சி தீயினால் பாதிக்கப்பட்டது. அது உயிர்வாழக்கூடிய தாக்கமாக இருந்திருக்காது.

இங்கிருந்து வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரண்டாவது காட்சி, அந்த விமானம் எரியவில்லை, ஆனால் அதில் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை” என தெரிவித்தனர். 
மேலும் விபத்து நடந்த பகுதி குறித்து உள்ளூர் கவுன்சிலர் சுசி பிராண்ட்ஸ்டேட்டர்  இப்பகுதி பயிற்சி விமானிகள் மற்றும் பொழுதுபோக்கு ஃபிளையர்களால் பிரபலமானது எனக் கூறியுள்ளார்.  இச்சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!