மீண்டும் நிரம்பி வழியும் மேட்டூர் அணை... 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி ஆற்றுப் பகுதியில் மழை வலுவாகப் பெய்து வருகிறது. இதன் விளைவாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் அதிரடி உயர்வை பதிவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 111 அடிவரை குறைந்திருந்தது. ஆனால் சமீபத்திய மழைப்பொழிவால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உயிர் பெற்றதால், அணைக்குள் நீர்வரத்து திடீரென அதிகரித்தது.
இந்த பெருக்கினால், மேட்டூர் அணை இந்த ஆண்டு ஏழாவது முறையாக கடந்த 20ம் தேதி நிரம்பிய நிலையை எட்டியது. கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதாலும் அணைக்குள் நீர்வரத்து மேலும் உயர்ந்தது. நேற்று மதியம் முதல் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 45,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 65,000 கனஅடி அளவை எட்டியதால், காவிரி ஆற்றில் திறக்கும் நீரும் அதே அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!