வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மரத்தின் மீது தஞ்சமடைந்த தாய்-குழந்தைகள் ... நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பல பகுதிகளைக் கடுமையான வெள்ளப்பெருக்குச் சூழ்ந்துள்ளது. வெள்ளநீர் குடியிருப்புப் பகுதி வீடுகளின் கூரையைத் தொடும் அளவுக்கு அபாயகரமாக உயர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். அப்போது வெள்ளத்தில் இருந்து தப்பிக்கத் தாய் ஒருவர் தனது கைக்குழந்தைகளுடன் மரத்தின் மீது ஏறித் தஞ்சமடைந்த திடுக்கிடும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
बेहद ही भावुक करने वाला वीडियो सामने आया है। 😭
— Sunil Kumar (@sunilku20403616) July 25, 2026
जानकारी के मुताबिक यह वीडियो असम से आया है इस वीडियो में साफ देखा जा सकता है कि बच्चे मां के साथ पेड़ पर चढ़े हुए हैं ।
बाढ़ के पानी घर के छतों के बराबर बह रही है...जान बचाने के लिए कुछ लोग पेड़ पर चढ़े हुए हैं।
छतों तक बहता… pic.twitter.com/UyTxLKelld
அந்தக் காட்சியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கத் தாய் மரக்கிளையைப் பலமாகப் பற்றிக்கொண்டு உயிருக்குப் போராடுகிறார். தங்கள் உயிரைக் காத்துக் கொள்ளக் குழந்தைகளும் தாயைக் கெட்டியாகக் கட்டியணைத்தபடி மரத்தின் கிளை நுனியில் அமர்ந்து தவிக்கின்றனர். நெஞ்சை நடுங்க வைக்கும் இந்த விபரீதக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தகவலாறிந்த தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மரங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களைப் பத்திரமாக மீட்டுப் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடப்பில் உள்ளன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அரசு விரைந்து வழங்கி வருகிறது. அசாமில் தாய் குழந்தைகளுடன் மரத்தில் ஏறி உயிரைக் காக்கப் போராடிய இந்தக் காட்சி உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.